×

மஞ்சாநாயக்கன்பட்டியில் வயல் வெளி தின விழா

*விவசாயிகளுக்கு ஆலோசனை

தோகைமலை : தரகம்பட்டி அருகே மஞ்சாநாயக்கன்பட்டியில் வயல் வெளி தினம் நிகழ்ச்சி நடந்தது.கரூர் மாவட்டம் கடவூர்ர் வட்டாரத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே உள்ள மஞ்சாநாயக்கன்பட்டியில் புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக புதிய நிலக்கடலை ரகம்டிசிஜிஎஸ் 10 மற்றும் டி.சி.ஜி.எஸ் 1694 சாகுபடியில் வயல்வெளி தினம் நிகழ்ச்சி நடந்தது. விருதாச்சலம் மண்டல தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட புதிய நிலக்கடலை ரகமான 10 மற்றும் திருப்பதி மண்டல ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட டி.சி.ஜி.எஸ் 1694 ஆகிய இரண்டு ரகங்களை சாகுபடியில் ஈடுபடுத்தப்பட்டது.

வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி பொம்முராஜ் வயலில் சாகுபடி செய்யப்பட்ட வயலில் புதிய ரக நிலக்கடலையின் பயிர் தன்மை, அதன் வளர்ச்சி மகசூல் குறித்து ஆய்வு செய்வதற்காக வயல்வெளி தின நிகழ்ச்சிநடந்தது.மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி பொம்முராஜ் வயலில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் தலைமை வகித்தார். புதிய ரகத்தின் மூலம் சாகுபடி செய்த நிலக்கடலையில் பல்வேறு ஆய்வுகளின் வெளிப்பாடுகளை எடுத்துரைத்தார். கடவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்தார்.

இதில் புதிய ரகங்களான வி.ஆலீ;.ஐ 10 ரகமானது 90 முதல் 95 நாட்கள் வயது உடையது கொத்து வகை கடலை ரகத்தினை சேர்ந்தது ஆகும். மேலும் 46 முதல் 48 சதவீதம் எண்ணெய் பசை கொண்டது. இதேபோல் சாறு உறுஞ்சும் பூச்சிகள் மற்றும் இலைப்புள்ளிஇ துரு நோய்களை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த ரகமானது இறவையில் ஒரு ஏக்கருக்கு 1050 கிலோ மகசூல் கிடைக்கிறது.

இதேபோல் டி.சி.ஜி.எஸ் 1694 ரகமானது 105 முதல் 110 நாட்கள் வயது கொண்டது. இந்த வகை 50 சதவீதம் எண்ணெய் பசை கொண்டு உள்ளது. மேலும் பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டதோடு ஒரு ஏக்கருக்கு 1400 கிலோ மகசூல் கிடைக்கிறது.புதிய ரகத்தின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகளுக்கு நிலக்கடலை ரகவிதைகள் நுண்ணுயிரி உரங்களான ரைசோபியம் பாஸ்போபாக்டீரியா எதிரி உயிர் பூஞ்சனங்களான பேசிலஸ் சப்டிலஸ் டிரைக்கோடொமா விதைகளுடன் கலந்து வழங்கப்பட்டு அதனை விதைநேர்த்தி செய்து விதைக்கப்பட்டது. இந்த பயிரின் வளர்ச்சி மற்றும் அதிக பூப்பிடிப்பு திறனுக்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நிலக்கடலை (நுண்ணுட்டம்) ஏக்கருக்கு 2 கிலோ இலை வழியாக பூக்கும் தருணம் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் சாகுபடி வயலில் பயிர்களுக்கு ஊட்டமாக அளிக்கப்பட்டது.

பூச்சி மேலாண்மைக்கு பூச்சிகளை கண்காணித்து மீன் எண்ணெய் சோப் ஒரு லிட்டருக்கு 3 முதல் 5 மில்லி தண்ணீருடன் கலந்து தெளிக்கப்பட்டது. தொடந்து வேளாண் மையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் திருமுருகன் கண்காணிக்கப்பட்டு வந்ததோடு இந்த வயல்களை மேற்பார்வையுடன் ஆலோசனை வழங்கினார்.இதனை தொடர்ந்து வயல்வெளி தின விழா நடத்தப்பட்டது. இதில் தற்சமயத்தில் அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சிகள் நோய்களை தாங்கி வளரக்கூடிய ரகங்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய புதிய ரகங்களை பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு செலவினங்கள் குறைந்து காணப்பட்டது.

மேலும் அதிக மகசூல் மற்றும் வருமாணம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நலத் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு துணையாக இருக்கிறது. இந்த நிலக்கடலை புதிய ரகங்கள் சாகுபடியின் மகசூல் மற்றும் செலவின விவரங்கள் பயிரின் அறுவடைக்கு பின் வெளிப்படுத்தும்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் திருமுருகன் தமிழ்ச்செல்வி மற்றும் முன்னோடி விவசாயி பொம்முராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் மஞ்சாநாயக்கன்பட்டி கிராம விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மஞ்சாநாயக்கன்பட்டியில் வயல் வெளி தின விழா appeared first on Dinakaran.

Tags : Mansanayakkanpatti Field Outdoor Day Festival ,Manzanayakanpatti ,Dhagampati ,Karur District ,Kadavur District ,Manzanayakanakanpatti Field Outdoor Day Festival ,Dinakaran ,
× RELATED வள்ளியூர் ரயில்வே பாலத்தில்...